ETV Bharat / state

தூத்துக்குடியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம் - தூத்துக்குடி மாநகராட்சி மியாவாக்கி முறை

தூத்துக்குடி: மாநகராட்சியில் மியாவாக்கி முறையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆணையர் தொடங்கி வைத்தார்.

uti
tuti
author img

By

Published : Nov 22, 2020, 8:02 PM IST

மத்திய அரசால் அறிவித்துள்ள புள்ளி விவரத்தின் படி காற்றின் மாசு அதிகம் உள்ள 123 நகரங்களின் பட்டியலில் தூத்துக்குடி இடம்பெற்றுள்ளது. எனவே, அதனை சரிசெய்யும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தருவைகுளம் கலவை உரக் கிடங்கில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக சாலையோரங்களில் அதிகப்படியான மரங்களை நட்டு வளர்ப்பதற்கும், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அடர் காடுகளை வளர்ப்பதற்கும் தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் இரண்டாயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகர பகுதியில் சேரும் குப்பைகள் கொட்டப்படும் இந்த 500 ஏக்கர் முழுவதும் மரங்கள் வளர்க்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.