ETV Bharat / state

6 மாதத்திற்குப் பிறகு இயங்கும் அனல்மின் நிலையம்? - தூத்துக்குடி

தூத்துக்குடி: ஆறு மாதமாக செயல்படாத என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தின் இரண்டாவது யூனிட் விரைவில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிபிஎல் அனல்மின் நிலையம்
author img

By

Published : Jul 23, 2019, 12:06 PM IST

Updated : Jul 23, 2019, 2:48 PM IST

என்எல்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து என்டிபிஎல் சார்பில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை செயல்படுத்தி வந்தன.

இங்கு தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 யூனிட்கள் உள்ளன.இந்நிலையத்தின் 2ஆவது யூனிட்டில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படாததால் கடந்த ஆறு மாத காலமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த அனல்மின் நிலையம் மின் உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில் இதன் 2ஆவது யூனிட்டில் கடந்த 16.01.2019-இல் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது ஏற்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களாக 2ஆவது யூனிட் செயல்படவில்லை.

இதுகுறித்து என்டிபிஎல் அலுவலகர்களிடம் கேட்டபோது, 2ஆவது யூனிட்டில் மின் உற்பத்தி செய்யப்படும் டர்பைன் பகுதியில் பழுது ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

டர்பைன் பழுதை இங்கே வைத்து சரிசெய்ய முடியாது. பாரத் மிகுமின் நிலையம் (BHEL) தான் இந்த டர்பைனை தயாரித்து வழங்கியது. எனவே, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பாரத் மிகுமின் நிலைய ஆலைக்கு கொண்டு சென்றால்தான் சரிசெய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது .

எனவே டர்பைன் இயந்திரம் ஹரித்வார் கொண்டு செல்லப்பட்டது. இங்கிருந்து அதனை ஹரித்வாருக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல 45 நாட்களும் மீண்டும் கொண்டு வருவதற்கு 45 நாட்கள் என பழுதை சரி செய்ய 2 மாதங்களுக்கு மேல் ஆகும்.

அதன் அடிப்படையில் டர்பைனை ஹரித்வார் கொண்டு சென்று சரிசெய்து,மீண்டும் இங்கே கொண்டுவரப்பட்டு விட்டது. அதனை பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக சோதனை செய்து இயந்திர பாகங்களை பொருத்திட வேண்டியுள்ளது.

எனவே இன்னும் ஒரிரு நாட்களில் இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்து 2ஆவது யூனிட்டில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்றனர்.

Intro:தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் ஏற்பட்ட பழுதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்புBody:

தூத்துக்குடி

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் ஏற்பட்ட பழுது கடந்த 6 மாதங்களாக சரி செய்யப்படாததால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் என்எல்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை இணைந்த கூட்டுநிறுவனமான என்டிபிஎல் சார்பில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் உள்ளன. 
கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த அனல்மின் நிலையம் மின் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த அனல்மின் நிலையத்தின் 2-வது அலகில் கடந்த 16.01.2019-ல் திடீர் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பழுது ஏற்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களாக 2-வது யூனிட் செயல்படவில்லை.
இது குறித்து என்டிபிஎல் அதிகாரிகளிடம் கேட்டபோது, 2-வது அலகில் மின் உற்பத்தி செய்யப்படும் டர்பைன் பகுதியில் பழுது ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. டர்பன் பழுதை இங்கே வைத்து சரி செய்ய முடியாது. பாரத் மிகுமின் நிலையம் (BHEL பெல்) தான் இந்த டர்பனை தயாரித்து வழங்கியது. எனவே, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பாரத் மிகுமின் நிலைய ஆலைக்கு கொண்டு சென்று தான் சரி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து டர்பைன் இயந்திரம் ஹரித்வார் கொண்டு செல்லப்பட்டது. இங்கிருந்து அதனை ஹரித்வாருக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல 45 நாட்கள் ஆகும். அதுபோல கொண்டு வருவதற்கு 45 நாட்கள் ஆகும். பழுதை சரி செய்ய 2 மாதங்கள் ஆகும்.
அந்த அடிப்படையில் டர்பன் ஹரித்வார் கொண்டு செல்லப்பட்டு சரி செய்து, இங்கே கொண்டுவரப்பட்டு விட்டது. அதனை பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக சோதனை செய்து இயந்திர பாகங்களை பொருத்த வேண்டியுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்து 2-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்றனர்.Conclusion:
Last Updated : Jul 23, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.