தூத்துக்குடி கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து இயற்கை வளப் பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-ம் ஆண்டு மினி மாரத்தான் போட்டிகள் 13 வயது வரையும், 14 வயது முதல் 17 வயது வரையும், 18 வயதுக்கு மேல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு, மருத்துவர் எஸ்.தாமோதரன், வனச்சரகர் எஸ்.சிவராம், திருநெல்வேலி கல்லூரி கல்வித்துறை துணை இயக்குநர் எல்.மயிலம்மாள், அதிமுக பிரமுகர் எஸ்.வேல்செல்வி ஆகியோர் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: கடம்பூர் ராஜு - Toothukudi
தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தூத்துக்குடி கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து இயற்கை வளப் பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-ம் ஆண்டு மினி மாரத்தான் போட்டிகள் 13 வயது வரையும், 14 வயது முதல் 17 வயது வரையும், 18 வயதுக்கு மேல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு, மருத்துவர் எஸ்.தாமோதரன், வனச்சரகர் எஸ்.சிவராம், திருநெல்வேலி கல்லூரி கல்வித்துறை துணை இயக்குநர் எல்.மயிலம்மாள், அதிமுக பிரமுகர் எஸ்.வேல்செல்வி ஆகியோர் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து இயற்கை வள பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-ம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது. கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் எல்.பி.ஜோதிபாசு ஆகியோர் தலைமை வகித்தனர்.
போட்டிகள் 13 வயது வரையும், 14 வயது முதல் 17 வயது வரையும், 18 வயதுக்கு மேல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 13 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 2 கி.மீ. தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கு 4 கி.மீ. தூரமும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 6 கி.மீ. தூரமும், பெண்களுக்கான 13 வயதுக்கு உட்பட்டோருக்கு 2 கி.மீ. தூரமும், மற்ற பிரிவுகளுக்கு 3 கி.மீ. தூரமும் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், 13 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் பூவரசன் முதலிடம், முத்துஇசக்கி 2-ம் இடமும், மாதவன் 3-வது இடமும் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ரூபன் இசக்கி முதலிடமும், குரு எத்திராஜ் 2-ம் இடமும், கார்த்திக்ராஜ் 3-வது இடமும் பிடித்தனர். 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அருண் முதலிடமும், வெங்கடேஷ் 2-ம் இடமும், செல்வராஜ் 3-ம் இடமும் பிடித்தனர்.
பெண்களுக்கான 13 வயதுக்குட்டோர் போட்டியில் தைரியலட்சுமி முதலிடமும், கனகலட்சுமி 2-ம் இடமும், சுதாலட்சுமி 3-ம் இடமும் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலைச்செல்வி முதலிடமும், மாரிச்செல்வி 2-ம் இடமும், ஐஸ்வர்யா 3-ம் இடமும் பிடித்தனர். 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஜெயபாரதி முதலிடமும், மீனாட்சி 2-ம் இடமும், கார்த்திகா ராணி 3-ம் இடமும் பிடித்தனர்.
போட்டிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மருத்துவர் எஸ்.தாமோதரன், வனச்சரகர் எஸ்.சிவராம், திருநெல்வேலி கல்லூரி கல்வித்துறை துணை இயக்குநர் எல்.மயிலம்மாள், அதிமுக பிரமுகர் எஸ்.வேல்செல்வி ஆகியோர் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் செய்துங்கநல்லூர் வரை ரூ.37 கோடியில் இருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக உள்ள கோவில்பட்டியில் போக்குவரத்து வசதிக்காக, லாயல் மில் மேம்பாலம் முதல் லட்சுமி மில் மேம்பாலம் வரை 2.2 கிலோ மீட்டர் தூரம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக மாற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு மாத காலத்துக்குள் முடிவடையும்.
நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் அரசின் கருத்தாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சட்டமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு பெற கடைசி வரை போராடி நேரத்தில் தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அந்த தடை வாங்குவதற்கு காரணம் தமிழகத்தை சேர்ந்த நளினி சிதம்பரம். இது வெட்ககேடான விஷயம். அவர் அன்று தலையிட்டு வாதிடாமல் இருந்திருந்தால் விலக்கு கிடைத்திருக்கும். ஓராண்டு சட்டரீதியாக கிடைக்கின்ற நேரத்தில் ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய வழியை அதிமுக அரசு ஏற்படுத்தி இருக்கும். அதற்கு தடை விதித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். அதை பற்றி பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதை கிடையாது. எங்களுடைய கொள்கை நீட் வேண்டாம் என்பது தான். இன்றுவரை தடை பெற போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்.
உள்ளாட்சி மன்ற தேர்தல் நடக்காத இடங்களில் நிதி கொடுப்பதில் சிரமம் உள்ளது என்று பொதுப்படையாகத்தான் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படவில்லை. தமிழகத்தில் உள்ள வார்டுகளை மறுவரையறை பணிகள் 99 சதவீத பணிகளை முடித்து விட்டோம். ஒரு சதவீத பணிகளை முடித்து விட்டு, அரசுக்கு அறிக்கையாக சமர்பித்துவிட்டு தேர்தல் நடத்த தயாராக உள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதனை இங்குள்ளவர்கள் திரித்து கூறிவிட்டனர். வரும் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும். அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தாலும், நாங்கள் அதிமுக அரசின் திட்டங்களை தான் முன்னெடுத்தோம். தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைக்கு ஒரு மாதிரியும், சட்டமன்றத்துக்கு ஒரு மாதிரியும் மக்கள் வாக்களிப்பார்கள். நாங்கள் எங்களது ஆட்சியின் சாதனைகளை கூறி தான் வாக்கு கேட்போம்.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அருதி பெருபான்மையில் வந்துள்ளதால், நாமும் தேசிய நீரோட்டத்தோடு இணைந்திருந்தால் தமிழகம் வளம் பெற்றிருக்கும் என்று தமிழக மக்கள் மனநிலையில் மாற்றம் உள்ளது. எனவே, வேலூர் மக்களவை தொகுதியில் அபரிவிதமான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார், என்றார்.Conclusion:null