கரோனா தடுப்பு ஆய்வுப் பணிக்காக தூத்துக்குடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.11) வருகை தந்தார். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ’லீனியர் ஆக்ஸிலேட்டர்’ என்ற புற்றுநோய்க்கான நவீன கதிரியக்க சிகிச்சைக் கருவியை அவர் திறந்து வைத்தார்.
அப்போது, முதலமைச்சரை மருத்துவமனையில் சந்தித்த மாரீஸ்வரி எனும் மாற்றுத்திறனாளிப் பெண், தனக்கு வேலைவாய்ப்பு கோரி மனு ஒன்றை அவரிடம் அளித்தார்.
இந்நிலையில், அம்மனுவை அங்கேயே பரிசீலனை செய்த முதலமைச்சர் பழனிசாமி, மாரீஸ்வரியை உடனடியாக ஆட்சியர் அலுவலகம் வரவழைத்து, அரசு மருத்துவமனையில் பணியில் அவர் சேர்வதற்கான நியமன ஆணையையும் வழங்கினார்.
![appointment order](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-03a-differently-abled-women-appointmet-order-script-photo-7204870_11112020111722_1111f_1605073642_467.jpg)
மனு கொடுத்த சிறிது நேரத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் 328.66 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!