ETV Bharat / state

கொற்கை அகழாய்வு - 4 அடுக்கு சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி கொற்கை அகழாய்வில் நான்கு அடுக்கு சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொற்கை அகழாய்வு
கொற்கை அகழாய்வு
author img

By

Published : Jul 22, 2021, 12:42 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கொற்கையில், கடந்த 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதுதான் தமிழ்நாடு தொல்லியல்துறை உருவான பின்னர், செய்த முதல் அகழாய்வுப் பணியாகும். கொற்கை நகரம் சுமார் 2,800 ஆண்டுகள் பழமையானது என்பது அகழாய்வில் உறுதியானது.

52 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வு

இங்கு துறைமுகம் இருந்ததாகவும், கடல்வழி ஏற்றுமதி இறக்குமதி நடந்ததாகவும், பாண்டிய மன்னரின் தலைநராக இவ்விடம் விளங்கியது எனவும் அறியப்பட்டது. இங்கு 52 ஆண்டுகள் கழித்து, தற்போது அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

4 அடுக்கு சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு

அகழாய்வு இயக்குநர் முனைவர் தங்கத்துரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அகழாய்வுப் பணிக்காக, கொற்கைப் பகுதியில் 17 ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் ஏற்கெனவே சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான கட்டிடம், அறுக்கப்பட்ட நிலையில் சங்குகள், சங்குகள் பட்டை தீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் பல வடிவங்களில் கிடைத்துள்ளன.

மேலும் சங்கினால் செய்யப்பட்ட வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறீயிடுகள் என ஏராளமான பழங்கால பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், நான்கு அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்களை வடிகட்டும் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே குழியில் உருகிய கண்ணாடி மணிகள், இரும்புப் பொருள்கள், கடல் சிப்பிகள், கடல் உயிரினத்தின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வை போல கொற்கை அகழாய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கீழடியில் மற்றொரு அதிசயம்... சுடுமண் உறைக் கிணறுகள் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.