தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் இத்திருவிழா நடைபெறும்.
நாளை அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30க்கு விஷ்வரூப தீபாராதனையுன், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 21ஆம் தேதி 5 ஆம் திருநாளான குடவருவாயல் தீபாராதனையும், 23ஆம் தேதி 7ஆம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சார்த்திய கோலத்திலும், 24ஆம் தேதி 8ஆம் திருநாள் பச்சை சார்த்திய கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மேலும் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10ஆம் திருநாள் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழா அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:திண்டுக்கல் அருகே 3 மணிநேரம் போராடி வழுக்குமரத்தில் ஏறிய நபர்