ETV Bharat / state

திருச்செந்தூர் அருகே ராட்சத அலை மோதி மீனவர் உயிரிழப்பு! - தூத்துக்குடி

Tiruchendur Fisherman died: திருச்செந்தூர் அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, ராட்சத அலை மோதி தவறி விழுந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருச்செந்தூர் அருகே ராட்சத அலை மோதி மீனவர் உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 11:00 AM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர், குரூஸ் என்பவரது மகன் ஆனந்த் (36). இவர், தனக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த ஜூலியஸ் என்பவரது மகன் ரவிஸ்டன் (30) என்பவர் உடன் நேற்று (டிச.9) காலை மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், சுமார் 5 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை, படகு மீது மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறிய ரவிஸ்டன், கடலில் தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த், அவரைக் காப்பாற்ற கடலில் குதித்துள்ளார்.

இதனிடையே, இதை அங்கு மீன்பிடித்துக் கொண்டு இருந்த சக மீனவர்கள் பார்த்து, அங்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர்களின் உதவியோடு ரவிஸ்டனை கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, பேச்சு மூச்சு இன்றி இருந்த ரவிஸ்டனை, உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே, இது குறித்து ஆனந்த், ஆலாந்தலை கடலோர பாதுகாப்பு குடும்ப போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்" - திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றக்கிளை பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.