ETV Bharat / state

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்திய 3 பேர் கைது!

தூத்துக்குடி: இலங்கைக்கு படகு மூலம் 1,000 கிலோ பீடி இலையை கடத்திச் சென்ற மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.

fisherman arrested
author img

By

Published : Nov 14, 2019, 7:45 PM IST

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் அலங்கார சாக்ரட்டீஸ் (26). கடந்த 11ஆம் தேதி அதிகாலை இவருக்கு சொந்தமான TN_l2 MO 1579 என்ற படகில் மீன் பிடிக்க செல்வதாகக் கூறி தனது நண்பர்களான அந்தோனி சேவியர் (28), முருகேசன் தினேஷ் (26) ஆகியோருடன் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், 12ஆம் தேதி இலங்கை கடலோர காவல்படையினர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கடல் எல்லைக்குள் சந்தேகப்படும்படியாக சென்ற படகை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, படகில் சுமார் 1,000 கிலோ பீடி இலையை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, படகையும், பீடி இலையையும் பறிமுதல் செய்து சாக்ரட்டீஸ் உள்பட மூவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

navy force Recovery boat
கடற்படையினாரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு

அதன்பின், கைது செய்யப்பட்ட மூவரையும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையையும் இலங்கை கடற்படையினர், கொழும்பு சுங்க இலாகா அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் படகை இலங்கை கடலோர காவல் படையினர் மேல்விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: துபாயிலிருந்து ஈரான் நாட்டு குங்குமப் பூக்களை கடத்தி வந்தவர் கைது!

Intro:தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்திய 3 பேர் கைது
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரைச் சேர்ந்த அலங்கார சாக்ரட்டீஸ் (வயது 26) என்பவருக்கு சொந்தமான TN_l2 MO 1579 என்ற வள்ளத்தில் கடந்த 11-ந்தேதி அதிகாலை சாக்ரட்டீஸ் தனது நண்பர்களான அந்தோனி சேவியர்(28), முருகேசன் தினேஷ்(26) ஆகியோருடன் மீன் பிடிக்க செல்வதாக கூறி கடலுக்கு அதிகாலையில் சென்றுள்ளனர்.12-ம் தேதி இலங்கை கடலோர காவல்படை கப்பல் ரோந்து வந்த போது இலங்கை கடல் எல்லைக்குள் சந்தேகப்படும்படியாக வந்த சாக்ரட்டீஸின் வள்ளத்தை சோதனை செய்தனர்.

சோதனையில் சுமார் 1000 கிலோ பீடி இலையை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வள்ளத்தையும் சாக்ரட்டீஸ் உள்பட மூவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாக்ரட்டீஸ், அந்தோணி சேவியர், முருகேசன் தினேஷ் ஆகிய மூவரையும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையையும் இலங்கை கடற்படையினர், கொழும்பு சுங்க இலாக அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
வள்ளத்தை இலங்கை கடலோர காவல் படையினர் மேல்விசாரணைக்காக கொண்டு சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.