ETV Bharat / state

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் - தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர்

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.

union president election
Thoothukudi union president election
author img

By

Published : Jan 13, 2020, 11:36 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட 22 உறுப்பினர்களும், ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள சேவை மையத்தில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் யூனியனில் திமுக 12, அதிமுக 6, காங்கிரஸ் 1, சி.பி.எம் 2, சுயேச்சை 1 என்ற அளவில் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றித் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் மருமகன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுகவுடன், அதிமுகவும் மறைமுக கூட்டணி அமைத்தது. முதலில் திமுகவின் காசி விஸ்வநாதன் தன்னுடன் தேர்வுசெய்யப்பட்ட 11 பேருடன் வந்தார்.

அதேபோன்று திமுகவின் ரமேஷ் தேர்வு செய்யப்பட்ட 8 உறுப்பினர்களுடன் மறைமுக தேர்தல் அறைக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து 11.30 மணிக்கு தேர்தல் தொடங்கியது. இதில் ரமேஷ், காசி விஸ்வநாதன் தலா 11 வாக்குகள் பெற்றனர்.

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்

பின்னர் குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இருவரின் பெயரும் எழுதப்பட்டு குலுக்கப்பட்ட சீட்டை ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பிரகாஷ் என்பவர் தேர்வு செய்தார். இதில் ரமேஷின் பெயர் தேர்வானதால் அவர் வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: 'செந்தில் பாலாஜி கோட்டையில் வெற்றி'க்கொடி நாட்டிய அதிமுக! மகிழ்ச்சியில் ர.ர.க்கள்!

Intro:ஒட்டப்பிடாரத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்

Body:ஒட்டப்பிடாரத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 12 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 11 மணிக்கு தொடங்கியது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட 22 உறுப்பினர்களும் ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள சேவை மையத்தில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் யூனியனில் திமுக- 12, அதிமுக-6, காங்கிரஸ்-1, சி.பி.எம்-2 , சுயேச்சை -1 என்ற அளவில் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் மருமகன் ரமேஷ் மற்றும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் திமுகவுடன், அதிமுகவும் மறைமுக கூட்டணி அமைத்தது. முதலில் திமுக காசி விஸ்வநாதன் தன்னுடன் தேர்வுசெய்யப்பட்ட 11 பேருடன் வந்தார்

இதனை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ சண்முகையாவின் உறவினர் ரமேஷ் தேர்வு செய்யப்பட்ட 8 உறுப்பினர்களுடன் மறைமுக தேர்தல் அறைக்கு வந்தார்.
இதனை தொடர்ந்து 11.30 க்கு தேர்தல் துவங்கியது. இதில் ரமேஷ் மற்றும் காசி விஸ்வநாதன் தலா 11 வாக்குகள் பெற்றனர்.

இதனை தொடர்ந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த காவ்ய ஸ்ரீ என்ற நான்கு வயது குழந்தை அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரகாஷ் என்பவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற குலுக்கலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் உறவினர் ரமேஷ் வெற்றி பெற்றார்.

இதனைதடுத்து ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கான அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.