ETV Bharat / state

பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகள் படுகாயம்: கொலை சதியா என போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனர். மேலும், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விபத்து சம்பவம் திட்டமிட்ட கொலைச் சதியா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகள் படுகாயம்

author img

By

Published : Dec 11, 2020, 12:29 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி தெற்கு காலனியைச் சேர்ந்தவர், அய்யாதுரை. இவர் தனது மகள் பழனிசெல்வியுடன் இருசக்கர வாகனத்தில் அய்யனேரியிலிருந்து முடுக்கலான்குளம் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.

ஜி.வி.என் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட அய்யாதுரையும், பழனிசெல்வியும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

உடனே அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர், கார் ஓட்டுநர் பெருமாள் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதறவைக்கும் சிசிடிவி காட்சி

மேலும், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையாகக் கொண்டு விபத்து சம்பவமானது திட்டமிட்ட சதியாக இருக்கக்கூடும் என காவல் துறையினர், சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; உயிர் தப்பிய 3 பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.