ETV Bharat / state

தூத்துக்குடியில் பைக்கில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்ட கனிமொழி..! - thoothukudi news

Thoothukudi MP Kanimozhi: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பைக்கிலும் சென்று பார்வையிட்ட கனிமொழி, அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்தார்.

Thoothukudi MP Kanimozhi
தூத்துக்குடியில் பைக்கில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்ட கனிமொழி..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 9:08 PM IST

தூத்துக்குடியில் பைக்கில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்ட கனிமொழி..!

தூத்துக்குடி: தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதித்தது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று (டிச 20) ஏரல் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து படகில் பயணித்து, மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டு அறிந்தார். மேலும், வாக்கி டாக்கி மூலம் அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துரைத்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பால், பிஸ்கட், குழந்தைகளுக்கான பால் பவுடர் மற்றும் சமைக்கத் தேவையான அரசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வேண்டும் என்று கோரிகை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் நிவாரண பொருட்களைப் படகில் கொண்டு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கினர். இதே போல நேற்று (டிச 20) அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்த தூத்துக்குடி மாநகரில் உள்ள டி.எம்.பி காலனிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வந்துகொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் கனிமொழியின் வாகனத்தை இடைமறித்து முற்றுகையிட்டனர்.

இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேரை தன்னுடன் அழைத்துச் சென்ற கனிமொழி, மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரியப்படுத்தி டி.எம்.பி காலனி பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான உணவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: உடந்தையாக இருந்த பெண் அதிகாரி உட்பட 2 பேர் கைது.. !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.