தூத்துக்குடி கே.வி.கே. நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் இரவு நேர பிரார்த்தனைகளை முடித்துவிட்டு ஆலய நிர்வாகிகள் வீட்டுக்குச் சென்று விட்டனர். இன்று காலை ஆலயத்திற்கு திரும்பி வந்து பார்க்கையில், ஆலயத்தின் கதவு திறக்கப்பட்டு இருந்தது.
பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் ஆலயத்திலிருந்த காணிக்கைப் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆலய பாதுகாவலர் மோசஸ் இந்த திருட்டு குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் ஆலயத்தில் நடந்த திருட்டு குறித்து அக்கம்பக்கத்தினரிடையே விசாரணை நடத்தினர். மேலும், ஆலயப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் ஆலயத்தின் காணிக்கைப் பணத்தை திருடிவிட்டு, திருடிய பணத்தை பொறுமையாக எண்ணிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவலர்கள், அதை வைத்து மூகமுடி அணிந்து வந்து கொள்ளையடித்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களால் இந்தியா எரிகிறது: திமுக தலைவர் ஸ்டாலின்!