ETV Bharat / state

அதிக அளவிலான சரக்கு பெட்டகங்கள்: தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை! - புதிய சாதனை

தூத்துக்குடி: சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டு கையாண்ட 6.97 லட்சம் அளவு சரக்கு பெட்டகங்களை விட இந்த நிதியாண்டில் 7.03 லட்சம் அதிகளவு பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகம்
author img

By

Published : Mar 16, 2019, 11:31 PM IST

இது குறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான பொருளாதார இயந்திரமாக செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம். இது கடந்த நிதியாண்டு கையாண்ட 6.97 லட்சம் அளவு டிஇயு சரக்கு பெட்டகங்களை விட இந்த நிதியாண்டில் அதிகளவு பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.இச்சாதனையானது இந்த நிதியாண்டில் 18 நாட்களுக்கு முன்பாகவே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்கு பெட்டகங்களை ஒப்பிடுகையில் 15.03.2019 வரை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 7.03 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாண்டு 6.44 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய பெருந்துறைமுகங்களில் சரக்கு பெட்டகம் கையாளுவதில் வ.உ.சிதம்பனரார் துறைமுகம் மூன்றாம் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பல சாதனைகளைப் தொடர்ந்து நிகழ்த்த வேண்டும்.

இந்திய கப்பல்துறை அமைச்சகம் 2018-19ம் நிதியாண்டுநிர்ணயித்துள்ள 7.67 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கு அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தென்னிந்தியாவின் பொருளாதார இயந்திரமாக செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 6.97 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை விட அதிகளவில் இந்த நிதியாண்டில் 13.03.2019 அன்று கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இச்சாதனையானது இந்த நிதியாண்டில் 18 நாட்களுக்கு முன்பாகவே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்குபெட்டகங்களை ஒப்பிடுகையில் 15.03.2019 வரை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 7.03 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாண்டு 6.44 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது மட்டுமல்லாமல் இந்திய பெருந்துறைமுகங்களில் சரக்கு பெட்டகம் கையாளுவதில் வ.உ.சிதம்பனரார் துறைமுகம் 3 இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் இராமசந்திரன், இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து சரக்குபெட்டக முனையத்தின் இயக்குபவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டியதுடன், இனி வருங்காலங்களில் இது போன்ற பல சாதனைகளைப் தொடர்ந்து புரிய கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்திய கப்பல்துறை அமைச்சகம் 2018-19ம் நிதியாணடு  நிர்ணயத்துள்ள 7.67 இலட்சம் டிஇயு சரக்குபெட்டகங்களை கையாளுவதற்கு அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.