தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ள நிலையில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
பருவமழையின் காரணமாக தொடர்ச்சியாக கடலுக்கு செல்ல இயலாத நிலையில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்கவும், விசைப்படகு இறங்குத்தளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க;