தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் சங்குக்குளி காலனியைச் சேர்ந்தவர் மரிய ஜோசப்(44). அவர் கடந்த மூன்றாம் தேதி சக மீனவர்களுடன் அந்தமான் அருகே உள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அதைத்தொடர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர் எதிர்பாரத விதமாக கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். அலையின் தாக்கம் அதிகமாகயிருந்ததால் அவர் கடலில் முழ்கி உயிரிழந்தார்.
![thoothukudi fisherman death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03:35_tn-tut-01-fisherman-drowning-death-photo-script-7204870_05062020141955_0506f_1591346995_308.jpg)
அவருடன் சென்ற மீனவர்களால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு ஜோசப் உடலைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து அவரது உடல் திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.