தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் 65 வயது முதியவர் ஒருவர் கரோனா அறிகுறியுடன் இருந்ததை பரிசோதனையின் போது சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்தனர்.
அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுகாதார நடவடிக்கைகள் வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உமா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், பாண்டவர்மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் அன்புராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையினை, ஆட்சியர் பார்வையிட்டு வியாபாரிகளிடமும் பொது மக்களிடமும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 1464 வடமாநில தொழிலாளர்கள்!