ETV Bharat / state

தூத்துக்குடியில் உள்ள 8 கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பலகலைக்கழகம் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 10:46 PM IST

Thoothukudi college semester exam: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகத் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில் மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள 8 கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாகத் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொட்டித் தீர்த்த மழையால் சாலைகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், பல பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள், பாலங்கள், மின் இணைப்புகள் என அனைத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

வெள்ள பாதிப்பின் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தின் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதைப் போலக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது, கல்லூரிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துவைத்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில் மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளில் 26ம் தேதி முதல் டிசம்பர் 30 தேதி வரை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “ தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் உள்ள எட்டு பொறியியல் கல்லூரிகளில் 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) முதல் 30.12.2023 (சனிக்கிழமை) வரை நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.

தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்:

1. கிரேஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், முள்ளக்காடு.

2.டாக்டர்.ஜி.யு.போப் இன்ஜினியரிங் கல்லூரி, சாயர்புரம்

3.டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர்

4. ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் கல்லூரி, வாகைக்குளம்

5. ஜெயராஜ் அண்ணாபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, நாசரேத்

6. புனித அன்னை தெரசா பொறியியல் கல்லூரி, வாகைகுளம்

7.பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரி, மில்லர்புரம்

8. வி.வி இன்ஜினியரிங் கல்லூரி, திசையன்விளை

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ காலிப்பணியிடங்கள் உயர்வு..! தேர்வர்கள் மகிழ்ச்சி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.