ETV Bharat / state

வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளி மனு.. ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த ஆட்சியர்! - மாற்றுத்திறனாளி கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்

தூத்துக்குடி அருகே வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளி ஒருவர் ஆட்சியரிடம் முறையிட்ட ஒரே நாளில் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 4:36 PM IST

தூத்துக்குடி: விளாத்திகுளம் வட்டம் புதூர் குறுவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகன் மாரிமுத்து. இவர் நேற்று காலை (செப்.05) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்க சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு அலுவலர், அவரிடம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் பிற அடையாள அட்டைகளைக் கேட்டிருக்கிறார்.

இந்நிலையில், தன்னிடம் மற்றுத்திறனாளி அட்டை கேட்பதாக அலுவலர் மீது மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தார். உடனடியாக மேற்கண்ட நபரை விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. பின்னர், மாரிமுத்துவும் ஆட்டோ மூலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். அவரால் ஆட்டோவில் இருந்து இறங்கிச் செல்ல முடியாததால், அதிகாரிகளே சம்பவ இடத்திற்குச் சென்று, மனுதாரரைப் பற்றி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையின்போது அதிகாரிகளிடம் அவர் கூறுகையில், “எனக்கு இரண்டு கைகளும் கால்களும் முழுமையாக செயல்படவில்லை. தந்தை இல்லை, தாயார் மட்டும் உள்ளார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகள்; அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தனக்கு 41 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது தந்தை பெயரில் ஒரு வீடு உள்ளது. வீட்டு அருகே சூப் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். எனக்கு உதவியாக எனது தாயார் இருக்கிறார்” என தெரிவித்தார்.

தொடர்ந்த் பேசிய அவர், “எங்களுக்கு ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்கிறது. இதில், குடும்பத்தினர் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்க இயலாது. தற்போது வசிக்கும் நாகலாபுரம் கிராமத்தில் தகுதியான காலி மனை இல்லை. எனக்கு எந்த கிராமத்தில் வீட்டுமனை கிடைத்தாலும் தாயாருடன் அங்கு சென்று வசிக்க எனக்கு விருப்பம் உள்ளது” என்றார்.

இந்த காரணங்கள் கருத்தில்கொண்டு விளாத்திகுளம் கிராமத்தில் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தில் புல எண் 251/88ல் 60 ச.மீ யை மனுதாருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. “மாவட்ட ஆட்சியரிடம் எனது நிலையை தெரிவித்த உடனேயே எனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்த மாரிமுத்து, இலவச வீட்டு மனை பட்டாவை பெற்றுச் சென்றார். புகார் தெரிவித்த ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜுக்கு மாரிமுத்து தனது நன்றியை தெரிவித்தார்.

இதையும் படிங்க: கம்பம் திமுக துணை சேர்மன் மீது பண மோசடி புகார்.. ரூ.3 கோடி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட மக்கள் குமுறல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.