தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடி துறைமுகம் வந்த சீன கப்பலில் இருந்த மாலுமிகளால் தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது. தூத்துக்குடி வந்த சீன மாலுமிகள் கப்பலை விட்டு தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கப்பலானது துறைமுகம் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
வருகின்ற 22ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம் வருவதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிறப்பு மருத்துவப்பிரிவு, மருத்துவ உபகரணங்கள் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடியில் ரூ. 3.50 லட்சம் செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்பட உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஒரே நாடு, ஒரே அட்டை திட்டத்தில் குளறுபடி இல்லை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்