தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்தது. விடியவிடிய பெய்த மழையின் காரணமாக, மாநகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தன.
இந்த கனமழையின் காரணமாக இன்று ஒரு நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பெரும்பாலான மாணவர்கள், விடுமுறை குறித்து தெரியாமல் பள்ளிக்குச் சென்று, விடுமுறை குறித்து அறிந்துகொண்டு வீடு திரும்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் - பகீர் சிசிடிவி காட்சி!