ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு

தூத்துக்குடியில் மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பூட்டப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி அய்யனடைப்பு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை
author img

By

Published : Dec 20, 2021, 7:41 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி அய்யனடைப்பு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 20) கோரிக்கை மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளரிடம் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் குற்றஞ்சாட்டிவந்தனர். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள், கழிவுநீர் ஆகியவை மறுசுழற்சி செய்து மீண்டும் ஆலையின் தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதை 'உண்மை சம்பவம்' என்ற புத்தகத்தின் மூலமாக நாங்கள் படித்துத் தெரிந்துகொண்டோம்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதனால் தூத்துக்குடியைச் சேர்ந்த பல கிராம இளைஞர், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடித்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.