ETV Bharat / state

பனிமூட்டத்தால் தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் தாமதம்!

பனிமூட்டம் காரணமாக கோவில்பட்டி ரயில் நிலையம் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் காலதாமதமாக சென்றது.

பனிமூட்டத்தால் கோவில்பட்டியிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் தாமதம்!

author img

By

Published : Dec 7, 2022, 5:50 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக இன்று(டிச.7) அதிக பனிப்பொழிவு இருந்த காரணத்தினால் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட விரைவு ரயில்களும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில், திருநெல்வேலி - கோவை அதிவிரைவு ரயிலும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாகச் சென்றது.

பனிமூட்டத்தால் கோவில்பட்டி வழியாக தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் தாமதம்!

இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் கால தாமதத்தினால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பயணிகள் ரயில் கால தாமதம் காரணமாக சரக்கு ரயில்களும் ஆங்காங்கே ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரிய விட்டுச்செல்கின்றன.

இதையும் படிங்க: பாலிதீன் பையில் டீ, காபி விற்றால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.