ETV Bharat / state

மகளிர் நலனுக்காகவும் சிறப்பான பல திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்துவார்- அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

தூத்துக்குடி: மகளிர் நலனுக்காகவும் சிறப்பான பல திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்துவார் என அமைச்சர் கீதா ஜீவன் பேட்டியளித்துள்ளார்.

அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
author img

By

Published : Jun 12, 2021, 2:12 AM IST

தூத்துக்குடியில் தளர்வுகளற்ற ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி இரண்டாம் கேட் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சமூக நலத்துறை, மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு நிவாரணத் தொகுப்புகளை வழங்கிப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு துறைக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்பு குழுக்களை நியமித்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

தளர்வுகளற்ற ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் பொருட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4000 ஆயிரம் ரூபாயும், 13 அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, திருநங்கைகள் நலனுக்காக அரசின் கரோனா நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிதி உதவிகள் சென்று சேர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

தாய் தந்தையரை இழந்த குழந்தைகளில் வளர்ச்சி நலனை கருத்தில் கொண்டு அவர்களை கணக்கெடுத்து அரசே அவர்களின் கல்விச் செலவையும் ஏற்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, தாய் தந்தையரை இழந்த குழந்தைகளாக 68 பேர் கண்டறியபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் மூலம் தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் பயனடையும் வகையிலும் சிறப்பான பல திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவார்’’ என்றார்.
இதையும் படிங்க: 'வழி நெடுக தோரணம் இல்லை, பேனர்கள் இல்லை..'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.