அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு, சுப்பிரமணியபுரம், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய கனிமொழி, இந்த ஆட்சியில் எந்த அடிப்படை வசதிகளும் கிராமங்களில் செய்யவில்லை. குடிநீர் முதல் சாலை வசதி வரை எதுவும் செய்யவில்லை. புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை. யாருக்கும் வேலைவாய்ப்பு வழங்கவும் இல்லை என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: இனிதான் ஆட்டமே ஆரம்பம்: வெளியானது 'கேஜிஎஃப்-2' டீசர்!