ETV Bharat / state

கடல் நீரில் மூழ்கிய தாம்போதி பாலம் - மரண பீதியில் கடந்து செல்லும் மக்கள்!

author img

By

Published : May 1, 2023, 5:13 PM IST

தூத்துக்குடி, தருவைக்குளம்-வெள்ளப்பட்டி சாலையில் உள்ள தாம்போதி பாலம் கடல் நீரில் மூழ்கிய நிலையில் வேறு வழியில்லாமல் இந்த சாலையை தினம்தினம் மரண பீதியில் கடந்து செல்வதாக மீனவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

Etv Bharat
Etv Bharat
நீரில் மூழ்கிய பாலத்தை மரண பீதியில் கடக்கும் மக்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் தருவைக்குளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடல் தொழிலை நம்பி மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தருவைக்குளத்தில் இருந்து வெள்ளப்பட்டி வழியாக மீனவர்கள் மீனை கொண்டு செல்ல ஏதுவாக தார்ச்சாலையானது ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலையானது, பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையாகும். அதாவது, மெயின் ரோட்டில் கடலில் பிடித்த மீன்களை வாகனத்தில் கொண்டுசெல்லும்போது அந்த கழிவு நீர் சாலையில் விழுந்து, அந்தச் சாலை வழியாகப்போகும் வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது. மேலும் மீன்களை உடனடியாக மீன் ஏல கூடத்திற்குச் சென்று சேர்க்க வசதியாகவும் இந்த சாலையை மத்திய அரசானது, மீனவர்களுக்கென்று பிரத்யேகமாக 5 கிலோ மீட்டர் தூரம் அமைத்தது.

இந்தச் சாலையை இணைக்கும் தாம்போதி பாலமானது 1 வருடகாலமாக கடல் நீரில் மூழ்கியவாறே உள்ளது. அமாவாசை, பௌா்ணமி காலங்களில் கடல் நீரானது, பெருக்கெடுத்து வரும். அப்போது அந்த தாம்போதி பாலத்தின் மேல் மட்டம் வரை வரும் தண்ணீர் முழுவதுமாக மூழ்கும். ஆனால் ஓரிரு நாட்களில் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பி விடும்.

தற்போது இந்தப் பாலத்தில், கிட்டத்தட்ட கடந்த 1 வருடகாலமாக அந்த கடல் நீர் மற்றும் கழிவு நீரானது அங்கேயே சூழ்ந்து கொண்டு பாசி படர்ந்து, துர்நாற்றம் வீசி, அந்த சாலையைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து நமது செய்தியாளர் செய்தி சேகரிக்கச் சென்றபோது, ஒரு மீனவர் நீரில் மூழ்கிய அந்த தாம்போதி பாதையைக் கடக்க முயன்றபோது அவர் நிலை தடுமாறி மிகவும் கஷ்டப்பட்டு கீழே தடுமாறி விழும் நிலைக்கு போய் ஒரு வழியாக கடந்து சென்றதாக செய்தியாளர் கூறுகிறார். இது குறித்து அந்நபர் கூறுகையில், “இவ்வாறு தான் தினம், தினம் அந்த சாலையை மரண பீதியில் கடக்கிறேன்” என வேதனையுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “தூத்துக்குடி தருவைக்குளம் ஏலக்கூடத்திலிருந்து வெள்ளைப்பட்டி ஏலக்கடை வரை செல்ல முக்கிய சாலையாக இது உள்ளது. தருவைக்குளம் - வெள்ளப்பட்டியில் இருந்து இந்த சாலை வழியாக சென்றால் 3 கி.மீ., கடந்து விடலாம்.

மெயின் ரோடு வழியாக சுற்றி வர 11 கி.மீ., ஆகிறது. வெள்ளப்பட்டி, சிலுவை பட்டி, தாளமுத்து நகர், தூத்துக்குடி வரை இந்த சாலை உள்ளது. இந்த தாம்போதி பாலத்தை மேம்பாலமாக மாற்றும் திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில், இந்த வழியாக வரும்போது வாகனம் செயலிழந்து பாதிப்படைகிறது. வேறு வழியில்லாமல் இந்தப் பாதையை பயன்படுத்தி வருகிறோம்” என வேதனையுடன் கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.