ETV Bharat / state

ககன்யான் திட்டம்: விண்வெளி வீரர்கள் தேர்வு - கே. சிவன் - விண்ணவெளி வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது

தூத்துக்குடி : மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு வருகிறார்கள் என இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.

k sivan
author img

By

Published : Nov 5, 2019, 7:07 AM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் கே. சிவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கிடையே தற்போது விளையாட்டுப் போட்டிகள் நடந்துவருகின்றன. அதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிச் செல்கிறேன்.

சந்திரயான்-2 செயற்கைக் கோளின் ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்துகொண்டிருக்கிறது. அதிலுள்ள கருவிகள் எல்லாம் சரியாக இயங்குகின்றன. அடுத்ததாக வருகிற நவம்பரில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளோம்.

'ககன்யான்' திட்ட வேலைகள் நல்லபடியாக நடந்துவருகின்றன. ககன்யான் திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவருகிறார்கள். தேர்வுசெய்யப்படும் வீரர்கள் பயிற்சிக்காக ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

கே சிவன் பேட்டி

இதையும் வாசிங்க : சந்திரனை ஆய்வு செய்ய காத்திருக்கும் சிலந்தி!

ககன்யா திட்டத்தின் அடிப்படை வேலைகள் எல்லாம் பூர்த்திசெய்யப்பட்டு பரிசோதனை ஓட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

தற்போது கிரையோஜெனிக், செமி கிரையோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் உள்பட புதுப் புது ராக்கெட் என்ஜின்களை வடிவமைக்கும் திட்டமும் வருங்காலத்தில் உள்ளது.

மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டுவரவுள்ளோம்" என்றார்.

Intro:மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யா திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
Body:மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யா திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

தூத்துக்குடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கிடையே தற்போது விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி செல்கிறேன். சந்திராயன்-2 செயற்கை கோளின் ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து பேலோட்ஸ் எல்லாம் சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது. அடுத்ததாக வருகிற நவம்பரில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை ஏவும் திட்டம் உள்ளது. "ககன்யா" திட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து வருகிறது. ககன்யா திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வுசெய்யப்படும் வீரர்கள் ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். ககன்யா திட்டத்தின் அடிப்படை வேலைகள் எல்லாம் பூர்த்திசெய்யப்பட்டு பரிசோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது கிரையோஜெனிக், செமி கிரோயோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் உள்பட புது, புது ராக்கெட் என்ஜின்களை வடிவமைக்கும் திட்டம் உள்ளது. மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டுவரவுள்ளோம் என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.