ETV Bharat / state

சிலைக்கு பாலீஷ் போடணும்.. ராஜ கோபுரத்தின் உச்சியில் ஏறியவர் மீட்பு..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 137 அடி உயர ராஜகோபுரத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தீயனைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 137 அடி உயர ராஜகோபுரத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு

author img

By

Published : May 17, 2022, 10:07 AM IST

Updated : May 17, 2022, 1:00 PM IST

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 137 அடி ராஜகோபுரம் உள்ளது. இதன் உச்சியில் 9 கலசங்கள் உள்ளன. இந்நிலையில் இரவில்,
ராஜகோபுரத்தின் உச்சியில் கலசத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் ஏறியிருப்பது பக்தர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையிருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்செந்தூர் தீயணைப்பு மீட்பு படையினர் அங்கு வந்தனர்.

மேலும் கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராஜகோபுரத்தின் உள்பகுதி படிகள் வழியாக தீயணைப்பு துறையினரும், போலீசாரும் ராஜகோபுரத்தின் மேல்பகுதிக்கு சென்றனர். அங்கு கலசத்தின் அருகே அமர்ந்து இருந்த மர்ம நபரிடம் சாதூர்யமாக பேசி பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூரை சேர்ந்த முருகேசன் மகன் முத்து(24) என தெரியவந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 137 அடி உயர ராஜகோபுரத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு

மேலும் அவர் கூறுகையில், தான் சிற்ப வேலை செய்வதாகவும், திருச்செந்தூர் ராஜகோபுத்தின் சிற்பங்கள் பெயிண்ட் மற்றும் பாலீஷ் செய்யாமல் இருப்பதால் ராஜகோத்தை பாலீஸ் செய்ய சென்றதாக தெரிவித்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தாயின் சடலத்தை டிரம்மில் போட்டு அடக்கம் செய்த மகன்!

Last Updated : May 17, 2022, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.