ETV Bharat / state

மீண்டும் வெடிக்கும் மருத்துவர்கள் போராட்டம்! தேதிகள் அறிவிப்பு - DOCTORS ASSOCIATION PROTEST

நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் முடிவாக அரசு வெளியிட்டுள்ள கூட்ட குறிப்புகள் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNGDA X Page/ ETV Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 11:10 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் நேற்று (நவம்பர்.28) வியாழன்கிழமை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

இச்செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது, “நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் Records of Discussions (கூட்ட குறிப்புகள்) அதிர்ச்சியும், வருத்தமும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

வேறு சங்கங்களின் கூட்டத்தையும், கோரிக்கைகளையும் சேர்த்து, நமது சங்கத்துடன் நடந்த கூட்டத்தில் ஏற்றுக் கொண்டதை கூட அரசு கொண்டு வராமல் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான கோரிக்கைகளை கூட பதியாமல் உள்ளது. இந்த நிலையில் இந்த Records of Discussions ஐ சங்கம் நிராகரிக்கிறது.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தினை தீவிரப்படுத்துவது என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு அளிக்க வேண்டும்.

கோரிக்கைகள்:

  1. மகப்பேறு மரண தணிக்கை கூட்டம் அத்துறையின் வல்லுனர்களைக் (EXPERTS) கொண்டு மட்டுமே நடத்தப்பட வேண்டும். அத்தகைய ஆய்வுக் கூட்டத்திற்கான புதிய வரைமுறை (Anonymous Audit) உடனடியாக வகுக்கப்பட வேண்டும். மருத்துவமல்லாத யாரும் ஈடுபடுத்தப்படக்கூடாது.
  2. மகப்பேறு மருத்துவர்கள் மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தாய் மரணங்களை குறைக்க எந்த வழியிலும் உதவாத மென்டரிங் ( Mentoring) முறை கைவிடப்பட வேண்டும்.
  3. மக்கள் நல்வாழ்வுத் துறையில் உள்ள அனைத்து மருத்துவர்கள் காலிபணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவ பணியிடங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.
  4. விருப்ப ஓய்வு முறையில் (VRS) ஓய்வு பெற விரும்பும் மருத்துவர்களுக்கு உடனடியாக விருப்ப ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
  5. திட்ட இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர்கள் போன்ற உயர் அதிகாரிகள் மருத்துவர்களுக்கு நேரடியாக ஆய்வுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். டீன், இணை இயக்குநர், துணை இயக்குநர், மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு கூட்டம் நடத்தினால் போதுமானது.
  6. நோயாளிகள் சம்பந்தப்பட்ட குறியீடுகள் (அறுவை சிகிச்சைகள் பிரசவங்கள் போன்றவைகள் நிர்ணயிக்கப் படக்கூடாது. அதேபோன்று குறியீடுகளை நிர்ணயித்து ரேங்க் வழங்கும் திட்டமும் கைவிடப்பட வேண்டும். பொதுவாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் பலவித வசதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு சில அளவீடுகளை வைத்து ரேங்கிங் (Ranking) செய்வது தவறானதாகும்.
  7. முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பொதுமக்களுக்காக செயல்படுகிறது. இந்தத் திட்டத்தில் மருத்துவர்களுக்கு குறியீடு இருக்கக் கூடாது. இவ்வளவு கேசுகள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்கான ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொரு நிலையத்திலும் டீன்கள் மற்றும் இயக்குனராலும் வாரந்தோறும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்படுகிறது.
  8. மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவ படிவங்களை அனுப்பவும் மட்டுமே செய்வார்கள். ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் குறியீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
  9. மருத்துவம் அல்லாத பணிகளை - அப்ரூவல் பெறுவது போன்றவை வார்டு மேனேஜர், Liaison Officer மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
  10. மருத்துவர்களுக்கு ஆய்வுக் கூட்டங்கள் அவர்களுடைய பணி நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.மாவட்ட அதிகாரிகள் நடத்தும் கூட்டம் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் நடத்தப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நெல்லையின் பிரம்மாண்ட திருமணம்! ஆர்.எஸ். முருகன் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டங்களை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

நவ.30: சனிக்கிழமை முதல் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் புறக்கணிக்கப்படும். மேலும் பயோமெட்ரி பதிவு முறை மற்றும் FRAS வருகை பதிவு முறையில் மருத்துவர்கள் தங்கள் வருகையினை பதிவு செய்ய மாட்டார்கள்.

டிச.2: திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் அனைத்து மாவட்ட பிரிவுகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், அந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவர் மற்றும் பணியாளர்கள் காலி பணியிடங்கள், மருந்துகள் மருந்துகளுக்கான பட்ஜெட், தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை தெரிவிப்பர்.

டிச.3: செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து துறைகளிலும் அவசரம் இல்லாத அனைத்து அறுவை சிகிச்சைகள் ஒரு நாள் அடையாளமாக நிறுத்தப்படும். இந்த போராட்டங்களுக்குப் பிறகும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிச.4ஆம் தேதி நடைபெறும் மாநில செயற்குழுத்தில் முடிவெடுக்கப்படும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.