ETV Bharat / state

டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யுங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

Updated : 1 hours ago

சென்னை: மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு (Hindustan Zinc Limited) வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க (Tungsten mining) உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்​ப​தற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்​தில் உள்ள அரிட்​டாபட்டி, மேலூர், சுருளிப்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர் பட்டி, தெற்கு தெரு, வெள்ளாளப்பட்டி உள்ளடக்கிய கிராமங்களில், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு சுற்றுச்​சூழல் ஆர்வலர்​கள் மற்றும் பொது​மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, பிரதமர் அவர்கள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்திட வேண்டும்.

இதையும் படிங்க: "அரிட்டாபட்டி கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்"-மத்திய அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்!

மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்த நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகப் போராடும் குழு
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகப் போராடும் குழு (ETV Bharat Tamil nadu)

இதற்கிடையில், கடந்த நவ.7 ஆம் தேதி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்கத்துறை தேர்வு செய்து அறிவித்துள்ளது. டங்ஸ்டன் தொகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது. அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம்.

இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது. இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: அரசுக்குக் கடிதம் - மதுரை ஆட்சியர் உறுதி!

மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும். இதனால், இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என சுரங்க அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.