ETV Bharat / state

பாம்பன் பாலம் சர்ச்சை: ரயில்வே வாரியம் அமைக்கும் குழு விரைவில் விசாரணையைத் தொடங்கும் - மதுரை ரயில்வே கோட்டம் - PAMBAN BRIDGE ISSUE

பாம்பன் பாலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ரயில்வே வாரியம் அமைக்கும் குழு விரைவில் விசாரணையைத் தொடங்கும் என மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாம்பன் மேம்பாலம் (கோப்புப்படம்)
பாம்பன் மேம்பாலம் (கோப்புப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 11:04 AM IST

பாம்பன்: மண்டபம் - ராமேஸ்வரத்திற்கு இடையே உள்ள பாம்பன் கடல் பகுதியில் இந்திய ரயில்வேயால் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் உறுதித்தன்மை, கடல் அரிப்பு, கர்டர்களின் தாங்கு திறன், தூண்களின் வலுத்தன்மை ஆகியவை குறித்து கடந்த நவம்பர் 13-14-ஆம் தேதிகளில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது 80 கி.மீ. வேகத்தில் பாம்பன் கடல் பாலம் மீது ரயில் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தென் மண்டல ஆணையர் அறிக்கை

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ரயில்வே வாரிய செயலாளருக்கு, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி, பாம்பன் புதிய பாலம் குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், ''தற்போதைய பாலம் மோசமான முன்னுதாரணத்தின் அடிப்படையில் திட்டமிடுதலில் இருந்து செயலாக்கம் வரை வெளிப்படையான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப லிஃப்ட் ஸ்பான் கர்டர் கட்டமைக்கப்படவில்லை. உலகின் மோசமான 2-ஆவது கடல் அரிப்புச் சூழலைக் கொண்ட பாம்பன் கடலில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் அதற்குரிய போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ரயில்வேயின் தவறு எனவும் தற்போதைய பாலத்தின் பல்வேறு பகுதிகளில் துருப்பிடிக்கத் தொடங்கியுள்ளன எனவும்'' அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், புதிய ரயில் பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.

இதையும் படிங்க: திருநெல்வேலி டூ ஷாலிமார் எக்ஸ்பிரஸ்: நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படுமா?

தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரியின் இந்த அறிக்கை சர்ச்சையான நிலையில், தெற்கு ரயில்வே, '' இதன் வடிவமைப்பு சர்வதேச ஆலோசனை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இதில் ஐரோப்பிய மற்றும் இந்திய மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு, சென்னை ஐஐடி தொழில்நுட்ப பல்கலைக்கழக வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் வடிவமைப்பு என்பதால், ரயில்வே வாரிய அறிவுறுத்தலின்படி ரயில்வே துறையும், ரயில்வே வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பும் தேவையான தொழில்நுட்ப ஆய்வுகளைச் செய்துள்ளன.

மேலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதனை தீவிர ஆய்வு செய்வதற்காக மும்பை ஐஐடி வல்லுநர்களை ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டது. இருமுறை மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில், இந்த வடிவமைப்பை தெற்கு ரயில்வே அங்கீகரித்தது. பாலத்தின் செயல்திறனுக்கு கர்டர்களின் இணைப்பில் வெல்டிங் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இந்த வெல்டிங் அனைத்தும் நவீன அல்ட்ராசானிக் இயந்திரம் மூலம் 100 சதவிகிதம் சரிபார்க்கப்பட்டது.

துரு பிடிக்காத பெயிண்ட்

மேலும், உலகத்தில் அதிக அளவில் துருப்பிடிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பாலி சிலிக்கான் வகை பெயிண்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 35 ஆண்டுகளுக்கு இந்த வடிவமைப்பு துருப்பிடிக்காமல் பாதுகாக்கும். மேலும், துரு பிடிக்காமல் தடுக்க தரமான இரும்பு, தரமான கான்கிரீட் வடிவமைப்புகள், இணைப்புகளில் பலமான வெல்டிங் முறைகள், பாதைகளில் நெகிழியிழை அமைப்புகள், எளிதில் ஆய்வு செய்யும் வசதி, கைப்பிடி அமைப்பு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவத்த ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு அவை முழுமையாகப் பின்பற்றப்படும்'' என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய ரயில்வே வாரியம் இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, '' பாம்பன் பாலத்தில் மேற்கொண்ட பணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிக்கைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டியவை குறித்து ரயில்வே வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது ரயில்வே வாரியத்தால் அமைக்கப்பட உள்ள குழு உரிய நேரத்தில் அதற்கான பணிகளைத் தொடங்கும். இன்று அல்லது நாளை அக்குழு உறுப்பினர்கள் குறித்து அறிவிக்கப்படலாம்' எனத் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், 'ரயில்வே வாரிய உயர் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தக் குழுவில் இடம் பெறக்கூடும். மதுரை ரயில்வே கோட்டம் அதற்குத் தேவையான உதவிகளை வழங்கும்' என்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.