இதுகுறித்து தூத்துக்குடிக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பழங்குடியின மக்கள் 60 லட்சம் பேருக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகையை பிரதமர் நரேந்திர மோடி கொடுக்காமல் தடுத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். அவரது இந்தக் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
மத்திய அரசு நேரடியாக யாருக்கும் உதவித்தொகை, நிதி வழங்குவதில்லை. பழங்குடியினருக்காக வழங்கப்படும் நிதி, மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். மாநில அரசுகள் தான் அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிசெய்கின்றன.
எனவே, உதவித்தொகை வழங்குதலுக்கும் பிரதமர் மோடிக்கும் நேரடித் தொடர்பு கிடையாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “வேளாண் சட்டங்களை மாற்றியமைத்திடுக”- அசோக் கெலாட் பிரமருக்கு கடிதம்!