தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு ராஜாத் தெருவைச் சோ்ந்த பியோ என்பவரது மகன் ராகவன்(17). இவர் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவர் உடன்குடியில் தனது நண்பனிடம் மோட்டாா் சைக்கிளை இரவலாக வாங்கிக்கொண்டு குலசேகரன்பட்டினத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது திருச்செந்தூரில் இருந்து உடன்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்து, ராகவன் ஓட்டிச் சென்ற இருச்சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் மங்கையா்க்கரசி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பவானி ஆற்றை சுத்தம் செய்த சமூக ஆர்வலர்கள்!