ETV Bharat / state

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மீது பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி ஊர்மக்கள் உண்ணாவிரதம்

author img

By

Published : May 11, 2020, 1:37 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் பெண் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி ஊர்மக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஊர்மக்கள் உண்ணாவிரதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன்‌ இணைந்து தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனத்தினர் ஆகியோர் கரோனா தடுப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடிக்கு உட்பட்ட பண்டாரம்பட்டியில் கடந்த மே 1ஆம் தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலை சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, லாரிகளில் பொருள்களைக் கொண்டுவந்து இறக்கியதாகத் தெரிகிறது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அனுமதியின்றி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க முற்பட்டதாக ஸ்டெர்லைட் ஆலை சார்பில் கொண்டுவரப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்து, தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காவல் துறையின் பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து பண்டாரம்பட்டியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ”கடந்த 1ஆம் தேதி அன்று 144 தடை உத்தரவை மீறி முகக்கவசம் ஏதுமின்றியும், அரசு அனுமதி இல்லாமல் ஸ்டெர்லைட் சார்பில் நிவாரணம் வழங்க மக்களை கூட்டம் கூட்டியதைக் கண்டித்த பெண்ணை, ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்‌ தாக்கினர். ஆனால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது கண்டிக்கத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்டோர்

எனவே பெண்ணைத் தாக்கியவர்கள் கைதுசெய்ய வேண்டும். பண்டாரம்பட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க...தனிமைப்படுத்தப்படும் வார்டை ஆய்வு செய்த காவல் ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.