ETV Bharat / state

’ஸ்டெர்லைட் விருந்து...  காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை தேவை’ - நடவடிக்கை தேவை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட காவல்துறை ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயக்கத்தினர் சார்பில் எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Sterlite
author img

By

Published : Aug 3, 2019, 1:12 PM IST

தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய எல்லைப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன், கடந்த வாரம் நெல்லை பாளையங்கோட்டை காவல்நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சார்பில் நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்ளிட்ட காவல்நியைங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கலந்துகொண்டதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலனிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி, ஸ்டெர்லைட் ஆலை மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காவல் ஆய்வாளர்களுக்கு விருந்து நடத்தி அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்த்துள்ளனர்.

முன்னதாக ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல்துறையினர் திட்டமிட்டு மக்களை சுட்டுக்கொன்றனர். தற்போது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையுடன் அவர்கள் கைகோர்த்துள்ளனர். எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார்.

Intro:ஸ்டெர்லைட் நிறுவன விருந்தில் கலந்துகொண்ட காவல் ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்யவேண்டும் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி பேட்டிBody:
ஸ்டெர்லைட் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட காவல்துறை ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலனிடம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் மனு அளித்தனர்.

இதைதொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஸ்டெர்லைட் குடியிருப்பு பகுதி வளாகத்தில் நடைபெற்ற விருந்தில் தூத்துக்குடியை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அரசு எடுத்த கொள்கை முடிவுக்கு எதிராக இதுபோன்று செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார்.

பேட்டி:- கிருஷ்ணமூர்த்தி - ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.