ETV Bharat / state

பாஜகவுடன் தொடர்பை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் - ஸ்டாலின் - பாஜகவுடன் தொடர்பை நிரூபித்தால்

தூத்துக்குடி: நான் பாஜகவுடன் தொடர்பு  வைத்துள்ளேன் என்பதை தமிழிசை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்று ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

'பாஜகவுடன் தொடர்பை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்'ஸ்டாலின்
author img

By

Published : May 15, 2019, 8:02 AM IST

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இறுதி கட்ட பரப்புரையை நேற்று மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், 'எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுகிற உரிமையில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

நான் பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ளதாக அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் தமிழிசை கூறியுள்ளார். அவர் அதனை நிரூபித்தால் நான் அரசியலிலிருந்து விலகுகிறேன். இல்லையெனில் அவர் அரசியலை விட்டு விலக வேண்டும்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூட சொல்லவில்லை. 14 மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது அதற்கான நிவாரணமும் சரியாக வந்து சேரவில்லை.

ஆகவே மத்தியில் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் ஏப்ரல் 18ஆம் தேதி உதயசூரியனுக்கு வாக்களித்தது போல், மே 19ஆம் தேதியும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வல்லநாடு ஊராட்சி பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேல கால்வாய், கீழ கால்வாய் தூர்வரப்படும்" என வாக்குறுதி அளித்தார்.

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இறுதி கட்ட ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனது இறுதி கட்ட பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அதை தொடர்ந்து அவர் காலையில் ராமச்சந்திரபுரம், ஜக்கம்மாள் புரம், கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மாலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லநாடு, தெய்வச்செயல்புரம், அக்க நாயக்கன் புரம், பரிவல்லிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளியில் திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,

தேர்தலுக்காக வாக்கு கேட்டு மட்டும் உங்களிடத்தில் வருவது திமுக இல்லை.
8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுகிற உரிமையில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

கடந்த 5 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி,
பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் நிறை வேற்றவில்லை.
இந்த லட்சணத்தில் நான் பிஜேபியுடன் தொடர்பு வைதுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தரராஜன் கூறியுள்ளார்.
அதை மறுத்து இன்று நான் அறிக்கை வெளியிட்டு உள்ளேன்.

நான் பாஜகவுடன் தொடர்பு  வைத்துள்ளேன் என்பதை  தமிழிசை நிரூபித்தால் நான் அரசியல் இருந்து அந்த நிமிடமே விலகுகிறேன். இல்லையெனில்  அவர் அரசியலை விட்டு விலக வேண்டும்.
வரும் 23 தேதிக்கு பின் அதுதான் நடக்க போகிறது.
தூத்துக்குடியில் நடந்த
துப்பாக்கி சூடுக்கு ஆறுதல் கூட பிரதமர் மோடி சொல்லவில்லை. 14 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்ட போது அதற்கான
நிவாரணம் கூட சரியாக கொடுக்கவில்லை.

ஆகவே மத்தியில் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் கடந்த 18 தேதி உதய சூரியனுக்கு ஓட்டு போட்டது போல், மாநிலத்திலும் ஆட்சியில் மாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் வரும் 19 தேதியும் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.
மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்கள்
ஆட்சியில் ஒட்டிகொள்ள வேண்டும் என்பதற்காகவே  இருக்கிறார்கள். மக்களுக்காக அவர்கள் கவலைப்படவில்லை.
கொள்ளை அடிக்க வேண்டும். கலெக்சன் வாங்க வேண்டும்,  கராப்சன் செய்ய வேண்டும் என செயல் படுகிறார்கள்.
மத்தியில் மோடி இருந்த காரணத்தால் தான் இங்கே
இந்த மைனாரிட்டி ஆட்சி நிலைத்து கொண்டிருக்கிறது.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான
வல்லநாடு ஊராட்சி பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேல கால்வாய், கீழ கால்வாய் தூர்வரப்படும்

கேபிள் கட்டணம் குறைப்பதற்கு சன் டி.வி., கலைஞர் டி.வி கட்டணத்தை குறைத்தால் கட்டணம் குறையும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இவர் போல மட்டாள் தனமான முதலமைச்சர் எங்கேயும் பார்க்க முடியாது. கேபிள் டிவி கட்டணத்தை மத்திய அரசின் ட்ராய் இலாகா தான் நிர்ணயிக்கும். எனவே
மத்திய ஆட்சி மற்றும்மல்ல மாநில ஆட்சியும் விரட்ட மக்கள் தயாராகி விட்டனர்.
ஒட்டபிடாரம் தொகுதிக்கு
இடைத்தேர்தல் வந்ததுக்கு காரணம் என்ன வென்று மக்களாகிய உங்களுக்கு தெரியும் .
ஆகவே இப்படிபட்டவர்க்களுக்கு தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.