தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து மழை வெள்ள காலங்களில் உபரிநீர் வெளியாவதை சேமிக்கும் வகையில் புன்னக்காயல், சேந்தமங்கலம் கிராமங்களில் 46 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும்பணி இன்று (பிப். 14) தொடங்கப்பட்டது.
வடகிழக்கு, தென்மேற்குப் பருவ காலங்களில் தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் படிநிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
இதனால் தண்ணீரின் வேகம் அதிகரித்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உபரிநீர் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களின் வழியாக சென்று கடலில் கலக்கிறது. கடல் நீர் உபரியாக சென்று, கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில், தடுப்பணைகள் அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இதன்படி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த பணியைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இன்று (பிப். 14) தொடங்கி வைத்தார். அவருடன் திருவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க... தமிழ்நாட்டில் பிரதமர் மோடி: செய்திகள் உடனுக்குடன்!