ETV Bharat / state

தூத்துக்குடியில் மண் சரிந்து குழியில் சிக்கிய 4 புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு - தனிப்படை போலீசாருக்கு பாராட்டு! - குழி தோண்டும் பணி

Thoothukudi news: குழாய் பதிப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்ததில் குழியில் சிக்கி புதையுண்ட 4 புலம்பெயர் தொழிலாளர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தனிப்படை போலீசாருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.

special police rescued 4 migrant laborers for danger in Thoothukudi
மண் சரிந்து குழியில் சிக்கிய 4 புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 12:44 PM IST

தூத்துக்குடி: முத்தையாபுரம் பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கியின் எதிரே ஐஓசிஎல் (IOCL) குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (அக்.18) இந்த குழாய் பதிக்கும் பணியில் புலம்பெயர் தொழிலாளர்களான உத்தரப்பிரதேசம் பாட்வாலியா ரோடி பகுதியைச் சேர்ந்த அசோக் சர்மா மகன் ஓம் பிரசாத் (26), பீகார் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஹரிராம் நாத் ஷா மகன் ஹரிராம் பிரசாத் (38), கட்டிவன் ஷா மகன் பிரசாத் (29) மற்றும் பீகாரைச் சேர்ந்த வக்கீல்கிரி மகன் ரிக்தேஷ் (25) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த குழி இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 பேரும் குழிக்குள் சிக்கி புதையுண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சுடலைமணி, சண்முகையா, கதிரவன், டேவிட் ராஜன் மற்றும் சக்தி மாரிமுத்து ஆகியோர் அடங்கிய மாவட்ட எஸ்.பி தனிப்படை போலீசார், உடனடியாக அந்த குழிக்குள் இறங்கி சரிந்த மண்ணை தோண்டி அகற்றி, அதில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர்.

பின்னர் அந்த 4 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குழிக்குள் மாட்டிக் கொண்ட 4 பேரையும் காப்பாற்றி, உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாரை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டினர்.

மேலும், இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், ஆபத்தில் சிக்கியவரை சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மீட்டு 4 உயிர்களை காப்பாற்றியதாக தனிப்படை போலீசாரை வெகுவாக பாராட்டி உள்ளார்.

இதையும் படிங்க: Leo Release: கட்டுப்பாடுகளால் களையிழந்த ரோகிணி திரையரங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.