ETV Bharat / state

இறந்து போன தந்தையின் பிறந்தநாள் விழா... ஊர் மக்களுக்கு கறி விருந்து கொடுத்து அசத்திய மகன்! - கறி விருந்து

இறந்து போன தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு மகன் ஊரில் உள்ள அனைவருக்கும் கறி விருந்து போட்டு, இலவச வேஷ்டி சேலை வழங்கி கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம்

தந்தையின் பிறந்தநாள் விழா முன்னிட்டு ஊர் மக்களுக்கு கறி விருந்து

author img

By

Published : Aug 14, 2023, 7:21 PM IST

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியை சேர்ந்த அடையல் ராஜரத்தினம் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். இந்த நிலையில் ராஜரத்தினத்திற்கு இன்று (ஆகஸ்ட் 14) 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அது மட்டுமின்றி அந்தப் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு 2 நாட்களாக அள்ள அள்ள குறையாத கறி விருந்தோடு, இட்லி, இடியாப்பம், மட்டன் கறி, சிக்கன் கொத்துக்கறி, சாதம், சில்லி சிக்கன், தோசை, முட்டை அடை, மட்டன் கீமா ஆகிய அறுசுவை உணவுகளுடன் கிராம மக்கள் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

தந்தையின் பிறந்தநாள் விழா முன்னிட்டு ஊர் மக்களுக்கு கறி விருந்து

மேலும், அந்தப் பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, தொழில் முனைவோர்களுக்கு தையல் இயந்திரம், உள்ளிட்டவைகள் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏழை எளியோர் கலந்து கொண்டு இலவச வேஷ்டி சேலையை வாங்கிவிட்டு விருந்தில் பங்கேற்றனர்.

இறந்து போன தனது தந்தையின் 73-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கிராம மக்களுக்கு அறுசுவை விருந்து அளித்து இலவச வேஷ்டி சேலை வழங்கிய இந்த நிகழ்வு அந்த பகுதியில் மிகுந்த மகழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஆடி அமாவசை 2023: சிறப்பு மற்றும் முறையான வழிபாட்டை விளக்குகிறார் பிரபல ஜோதிடர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.