தூத்துக்குடி: அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது.
அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவிலில் அறநிலையத் துறை சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. தம்பதிகளுக்குத் தங்கத் தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட 20 வகையான சீர்வரிசை பொருட்கள் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரசு சார்பில் வழங்கப்பட்டன. முதல் கட்டமாக இரண்டு ஜோடிகளுக்குத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்திருமணத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து, மணமக்களுக்கான சீர்வரிசை பொருட்களையும், அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருக்கோயில் இணை ஆணையர் அன்புமணி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மசோதாவில் கையெழுத்து: நேரம் எடுத்து கொள்ளலாம் - ஆளுநர் தமிழிசை