தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. விபத்துக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் நோயாளிகளுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால், தனியார் மருத்துவமனைக்கு அல்லது திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தரக்கோரி சமூக ஆர்வலர் முருகன் என்பவர், விவேகானந்தர் வேடமணிந்து தலைமை மருத்துவர் கமலவாசனிடம் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அங்கிருந்து புறப்பட்டார்.
இதையும் படிங்க: ’பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட திமுக’ - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!