ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்! - Silver clasps seized

தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிக் கொலுசுகளை கியூ பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Silver clasps seized for trying to smuggle into Sri Lanka

author img

By

Published : May 11, 2021, 9:31 PM IST

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வெள்ளிக் கொலுசுகள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த ரகசிய தவலின் பேரில், கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் உள்ளிட்ட காவல் துறையினர், இனிகோ நகரைச் சேர்ந்த மீனவரான பட்டு என்ற பட்டுராஜன் (38) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் நின்றிருந்த TN12 MO 2488 எண் கொண்ட நாட்டுப்படகை சோதனை செய்ததில், படகில் 20 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 20 லட்சம் ரூபாய் ஆகும்.

இதையடுத்து, பட்டுராஜாவை கைது செய்த காவல் துறையினர், 25 கிலோ வெள்ளிக் கொலுசுகளையும், படகையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.