ETV Bharat / state

'முகிலன், ரஜினியிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்..!' - வாஞ்சிநாதன் - விசாரணை

தூத்துக்குடி: "ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக கருத்துக் கூறிய நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்" என்று ஒருநபர் கமிஷன் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார்.

vanjinathan
author img

By

Published : Jul 17, 2019, 5:45 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

இந்த விசாரணையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஹரிராகவன், குமரெட்டியாபுரம் மகேஷ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பபட்டிருந்து. அதன் அடிப்படையில் ஒருநபர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அப்போது வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட கலவரம் திட்டமிட்டப்பட்ட ஒன்று. இதில் காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை வரம்புமீறி செயல்பட்டுள்ளது. இதுதொடர்பாக எங்களிடமுள்ள ஆதாரங்களையும், எங்கள் மீது வன்முறையை தூண்டுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும், வழக்குகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் விளக்கமளித்துள்ளோம்" என்றார்.

ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்

மேலும் பேசிய அவர், "ஸ்டெர்லைட் கலவரத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால்தான் வன்முறை அரங்கேறியது என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.
ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை எடுத்துக்கொண்டு அவரையும் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளோம்" என்று கூறினார்.

Intro:ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக கருத்துக்கூறிய நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம் - ஒருநபர் கமிஷன் விசாரணைக்கு ஆஜரான வக்கீல் வாஞ்சிநாதன் பேட்டி.
Body:ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக கருத்துக்கூறிய நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம் - ஒருநபர் கமிஷன் விசாரணைக்கு ஆஜரான வக்கீல் வாஞ்சிநாதன் பேட்டி.

தூத்துக்குடி

கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து ஆலையை தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இழுத்து மூடியது.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. தற்போது இந்த விசாரணை கமிஷனின் 13-வது கட்ட விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 13 கட்ட விசாரணையில் பொதுமக்கள், காயம்பட்டோர், கலவரத்தில் உயிர் இழந்தவர்கள் உறவினர், குடும்பத்தினர் என மொத்தம் 329-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று நடைபெறும் 13- வது கட்ட விசாரணையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற உயர்நீதிமன்ற வக்கீல் வாஞ்சிநாதன், ஹரிராகவன், குமரெட்டியாபுரம் மகேஷ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பபட்டிருந்து. அதனடிப்படையில் ஒருநபர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கமளிப்பதற்காக வக்கீல் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் வந்தனர். அப்போது வாஞ்சிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் 13 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் விசாரித்து வருகிறது. இன்று நடைபெறும் விசாரணையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆவணங்களோடு விசாரணைக்காக ஆஜராகுமாறு அழைக்கப்பட்டதன்பேரில் விளக்கமளிக்க வந்துள்ளோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட கலவரம் திட்டமிட்டப்பட்ட ஒன்று. இதில் காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்ப்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை வரம்புமீறி செயல்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாங்கள் எங்களிடமுள்ள ஆதாரங்களையும், எங்கள் மீது வன்முறையை தூண்டுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், வழக்குகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் விளக்கமளித்துள்ளோம்.

தற்போது எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் கலவரம் தீவிரவாதிகள் புகுந்ததால் அரங்கேறியது என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்கவேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.
ஸ்டெர்லைட் கலவரம்தொடர்பாக முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை எடுத்துக்கொண்டு அவரையும் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.