தூத்துக்குடி சிதம்பர நகர்ப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஓட்டல், மீன் மற்றும் இறைச்சிக் கடை, மண்பானை கடை என 60க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி மூலம் புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.
இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை காலி செய்ய உத்தரவிட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால், மேலும் அவசாகம் வழங்கி கடைகளை காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மே 12ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா உத்தரவிட்டிருந்தார். மாநகராட்சி அளித்த அவகாசம் முடிவடைந்த நிலையில், நேற்று (மே.13) மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
காவல்துறை பாதுகாப்புடன் கடைகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதுபோல் தூத்துக்குடி வஉசி மார்க்கெட் கடைகளையும் காலி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பிரசவத்திற்கு மட்டுமல்ல கரோனா நோயாளிகளுக்கும் இலவசம்' - ஆட்டோக்காரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு