தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர், இன்று (ஆகஸ்ட் 24) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தினர்.
அப்போது, முள்ளக்காடு, மெயின் ரோடு பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப் பதிவு செய்து கடை உரிமையாளரான ராமகிருஷ்ணன்(47) மற்றும் அவரது தந்தை ஆதிமுத்து(74) ஆகிய இருவரையும் கைது செய்தார்.
மேலும், அவர்களிடமிருந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுமார் நான்கு ஆயிரத்து 771 தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளும், சுமார் 28.5 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோல் மற்றொரு சம்பவமாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன் தலைமையிலான காவல் துறையினர் இன்று (ஆகஸ்ட் 24) எட்டையபுரம் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (37) என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன் வழக்குப்பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து நான்கு ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 300 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.