ETV Bharat / state

தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் தீ!

author img

By

Published : Sep 4, 2019, 12:02 PM IST

தூத்துக்குடி: இந்தோனேசியாவிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வஉசி துறைமுகத்திற்கு வந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடியில் சரக்கு கப்பலில் தீ

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளிலிருந்து நிலக்கரி, பிண்ணாக்கு உள்ளிட்ட மொத்த சரக்குகள் கப்பல் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

அதன்படி இந்தோனேசியாவிலிருந்து பிண்ணாக்கு ஏற்றிவந்த டிஎஸ் பேவர் என்ற கப்பல், நேற்று காலை 5.18 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்துக்குள் வந்தது. அங்கு 5ஆவது சரக்கு தளத்தில் கப்பல் நிறுத்தப்பட்ட கப்பலிலிருந்து சரக்கை இறக்கும் பணி நடைபெற்றது.

அப்போது கப்பலில் ஆயில் டேங்கர் பகுதியில் நேற்று மதியம் திடீரென லேசாக தீப்பிடித்தது. அதை தொடர்ந்து பூச்சி தடுப்பு மருந்து வைக்கப்பட்டு இருந்த பகுதியிலும் தீப்பிடித்ததாக கூறுப்படுகிறது. இதனால் அங்கு பயங்கரமாக புகை வரத் தொடங்கியது.

இதனையடுத்து அங்கு நின்ற இழுவைக்கப்பலில் இருந்து தீயை அணைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். பின்னர் துறைமுக தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Intro:தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு
சரக்கு ஏற்றி வந்த கப்பலில் தீப்பிடித்ததால் பரபரப்பு
Body:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி வந்த கப்பலில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சரக்கு கப்பல்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி, புண்ணாக்கு உள்ளிட்ட மொத்த சரக்குகள் கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி இந்தோனேசியாவில் இருந்து டி.எஸ்.பேவர் என்ற கப்பல், புண்ணாக்கு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்தது. இந்த கப்பல் நேற்று காலை 5.18 மணி அளவில் துறைமுகத்துக்குள் வந்தது. அங்கு 5-&வது சரக்கு தளத்தில் கப்பல் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கப்பலில் இருந்து சரக்கை இறக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
தீவிபத்து
இந்த நிலையில் கப்பலில் ஆயில் டேங்கர் பகுதியில் நேற்று மதியம் திடீரென லேசாக தீப்பிடித்தது. தொடர்ந்து பூச்சி தடுப்பு மருந்து வைக்கப்பட்டு இருந்த பகுதியிலும் தீப்பிடித்ததாக கூறுப்படுகிறது. இதனால் அங்கு பயங்கரமாக புகை வரத் தொடங்கியது. உடனடியாக அங்கு நின்ற இழுவைக்கப்பலில் இருந்து தீயை அணைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். அதே நேரத்தில் துறைமுக தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Conclusion:Photos videos not yet received.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.