தூத்துக்குடி மாவட்டம் சேராகுளம், செய்துங்கநல்லூர், சாத்தான்குளம் பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள், செல்போன்கள கொள்ளையடிக்கப்படுவதாக தொடர்ந்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர்களது மேற்பார்வையில், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா சுந்தர் தலைமையில் ஸ்ரீ வைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெகநாதன் உள்ளிட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்.
தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வெல்லூர் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து(19), வெல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்த கந்தசாமி என்ற கண்ணன்(22) ஆகிய இருவரையும் காவல் துறையினர் நேற்று (ஜன.29) கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் சேராகுளம், செய்துங்கநல்லூர், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள், ஆறு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கள் விற்ற நபர் கைது