ETV Bharat / state

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளுக்கு சிசிடிவி நேரலை - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு

தூத்துக்குடி: 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வ.உ.சி.அரசு பொறியியல் கல்லூரியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Breaking News
author img

By

Published : Apr 7, 2021, 10:41 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 2,097 வாக்குப்பதிவு மையங்களில் நேற்று அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தன. இந்த ஆறு சட்டப்பேரவை தொகுதிகளின் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் தூத்துக்குடி வ.உ.சி.அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.

இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அக்கல்லூரியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரமும் வாக்கு பதிவு இயந்திரத்துடன் வைக்கப்பட்டன. இவை அனைத்தும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்

பாதுகாப்பு கருதி 120-சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் தமிழ்நாடு காவல் துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 240-பேர் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தர்மபுரி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.