ETV Bharat / state

தேள் கொட்டி சிறுவன் சாவு - பெற்றோர் வேதனை - சிறுவன் சாவு

தூத்துக்குடி: எப்போதும் வென்றான் அருகே தேள் கொட்டியதில் இரண்டரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் சாவு
author img

By

Published : Jul 7, 2019, 8:20 PM IST

Updated : Jul 7, 2019, 8:30 PM IST

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகேயுள்ள காட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு உதயகுமார் என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே அறையில் நேற்றிரவு தூங்கியுள்ளனர். அதிகாலை ஐந்து மணியளவில் ஆண் குழந்தை உதயகுமார் திடீரென கதறி அழுததால் பெற்றோர் விழித்துப் பார்த்தபோது குழந்தையின் காலில் தேள் கொட்டியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Intro:தேள் கொட்டியதில் 2½ வயது குழந்தை பரிதாப சாவு
Body:
தூத்துக்குடி

எப்போதும் வென்றான் அருகே தேள் கொட்டியத்தில்  2½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகேயுள்ள காட்டுநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30).  இவரது மனைவி ஆதிமகேஸ்வரி. இந்த தம்பதியருக்கு உதயகுமார் என்ற 2½ மகனும், பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையும் உள்ளது. நேற்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே அறையில் தூங்கியுள்ளனர். இன்று அதிகாலை 5 மணியளவில் எழுந்த உதயகுமார் திடீரென கதறி அழுதுள்ளான். 

இதையடுத்து பெற்றோர் விழித்து பார்த்தபோது குழந்தையின் காலில் தேள் கொட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே  குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் உடல் பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Conclusion:Photos, videos not yet received.
Last Updated : Jul 7, 2019, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.