தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இன்னும் ஒருசில நாள்களுக்குக் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 2) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதிய புயல் முன்னெச்சரிக்கை: மத்திய அரசு அவசர ஆலோசனை