ETV Bharat / state

தந்தை, மகன் கொலை வழக்கு - ஆவணங்கள் நகல் கேட்டு வழக்கு - ஒத்திவைப்பு - சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான செய்திகள்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குறித்து சிபிஐ பதிவு செய்த ஆவணங்களின் நகல் தரக்கோரி, சிறையில் உள்ள எஸ்.ஐ ரகு கணேஷ் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

sathankulam case update
தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ பதிவிட்ட ஆவணங்களின் நகல் கேட்டு வழக்கு
author img

By

Published : Apr 20, 2021, 3:21 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு தொடர்பான சிபிஐ ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.

இதுவரை எனக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான், என் மீதான வழக்கை எதிர்கொள்ள முடியும். பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தவறான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை நீக்கக் கோரிய மனுவையும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.

எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்ட எனது மனுவையும், பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றசாட்டுகளை நீக்கவும் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை எனக்கு தர உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சதிகுமார் சுகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ-யின் கூடுதல் எஸ்.பி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது.

இதையும் படிங்க: நெடுஞ்சாலைத் துறை தேர்வு முறைகேடு: அரசு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.